என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடலில் மூழ்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு
    X

    கடலில் மூழ்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

    • பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
    • இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை சுமார் 5 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது 2 மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30-ந்தேதி அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×