என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி உதவி
- கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கடந்த நிதியாண்டில் இருந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் நோக்க த்தில் ஒரு பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை அல்லது இளநிலை வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்று பவராக இருக்க கூடாது.
கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.
முன் வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒற்றை உரிமையாள ருடையதாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்க ளுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க இயலாது. 21 வயது முதல் 40 வயதுடைய வர்களாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்ப டுத்துதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.
தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கை யினை இம்மாதத்தி ற்குள் திண்டல் வித்யா நகரில் உள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.






