செய்திகள்
சிறுமி கலைச்செல்வி

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி

Published On 2017-12-11 06:30 GMT   |   Update On 2017-12-11 06:30 GMT
கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற வந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடையநல்லூர்:

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் கலைச்செல்வி (வயது3). சிறுமிக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து கலைச்செல்வி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு பரிசோதனை செய்து சிறுமிக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நிலை மோசமாக காணப்பட்டதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி கலைச் செல்வி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். டெங்குவால் சிறுமி இறந்ததையடுத்து சங்கரன்கோவில் சுகாதார அதிகாரி தலைமையில் 5 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இன்று கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
Tags:    

Similar News