செய்திகள்

கமல் மக்களை நேரடியாக சந்திப்பது வரவேற்கத்தக்கது: சீமான்

Published On 2017-10-29 06:09 GMT   |   Update On 2017-10-29 06:09 GMT
கமல் மக்களை நேரடியாக சந்திப்பது வரவேற்கத்தக்கது என்று சீமான் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை:

பொது மக்கள் பிரச்சினை தொடர்பாக டுவிட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல் ஹாசன் நேற்று முதல் முறையாக களத்தில் குதித்தார்.

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

கமல்ஹாசன் மக்கள் பணிக்காக நேரடியாக களத்தில் இறங்கியதற்கு மத்திய மந்திரி பொன்ராதா கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் பணியினை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை நேரடியாக சந்திக்க கமல் முன்வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.

ரே‌ஷன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அளிக்கிறது. ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வு என்பது பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழி வகுக்கும். இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் ரே‌ஷன் கடையே இல்லாத நிலை உருவாகி விடும்.


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்றார். இப்போது அவர் அதை எதிர்க்கிறார். முதலில் அதை ஆதரித்த அவர் தற்போது எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News