search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரே‌ஷன் கடை"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌ஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #Rationshopstrike

    சென்னை:

    தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பாக இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    சம வேலைக்கு சம ஊதியம், குடோன்களில் இருந்து கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக வழங்குதல், பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 35 ஆயிரம் ரே‌ஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ரே‌ஷன் கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வில்லை. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் சென்னையில் பெரும்பாலான ரே‌ஷன் கடைகள் இன்று திறந்து இருந்தன. டி.யூ.சி.எஸ். மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரே‌ஷன் கடைகள் வழக்கம்போல இயங்கின.

    சென்னையில் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உதவி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் ரே‌ஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்து ரே‌ஷன் கடைகளையும் முழு அளவில் திறந்து செயல் படுத்த வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் ரே‌ஷன் பொருட்கள் விற்பனையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. #Rationshopstrike

    ×