என் மலர்

  நீங்கள் தேடியது "Ration shop"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.

  திருப்பூர் : 

  திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரு–கிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை–யும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 22-ந் தேதியும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் பார்க் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற உள்ளது.

  எனவே நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டு திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட 2 நகல்கள், 2 பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

  மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரேசன் பூட்டைஉடைத்து ஜீனி மற்றும் துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.

  பெரியகுளம்:

  பெரியகுளம் நேருநகர் பகுதியில் ரேசன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியை சேர்ந்த அழகர்(43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் பொருட்களை சரிபார்த்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார்.

  2 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைக்கு வந்தபோது பூட்டைஉடைத்து பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. அப்பகுதியில் 3 மர்மநபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். அழகர் சத்தம்போட்டதால் அவர்கள் பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  அவர்கள் விரைந்து வந்து பொருட்கள் சரிபார்த்தபோது 100 கிலோ ஜீனிமூடை 2-ம், 250 கிலோ துவரம்பருப்பு, பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொது விநியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளதாவது:

  தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில்  ரேசன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.

  2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.

  நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

  திண்டுக்கல் :

  திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-

  கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

  இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.

  தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

  அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

  தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

  ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.

  இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

  இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

  இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
  • கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

  சிவகங்கை

  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

  அவர் பேசும் போது கூறியதாவது:-

  தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.

  பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  காங்கயம் :

  காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

  கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • ரேஷன் கடையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அன்னூர்,

  அன்னூர் வட்டத்தில், அன்னூர்-மேட்டுப்பா ளையம் ஊராட்சி உள்ளது. கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நியாய விலைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக்கடையின் கீழ் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கக்கூடிய மலிவு விலை பொருட்கள் (அரிசி, பருப்பு, சக்கரை) பொங்கல் பரிசு, சமையல் எரிவாயு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இந்த கடைக்கு மாதந்தோறும் கிராமத்தைச் சுற்றி உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

  மக்கள் அதிகமாக வந்து செல்லும், நியாய விலைக்கடையில், அதன் மேல் சுவர்கள் விரிசல் விட்ட வண்ணம் உள்ளது. தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக சேதாரம் இன்னும் அதிகமாகும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் பட்சத்தில், மழைக்காலங்களில் ஏதேனும் நீர்க்கசிவு அல்லது மேற்கூரை இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவதங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

  மேலும் அங்கு இருக்கும் பொருட்களும் சேதமாகி, அத்தியாசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

  இதனை சீர் செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் ஊரா ட்சியில் வேலை விஷயமாக வரும் பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறுவதற்கு இந்த கட்டிடத்தின் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே இங்கு இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாதுடையாளர்குளத்தில் 240-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
  • தினமும் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க செல்வதால் சிரமமாக உள்ளது.

  நெல்லை:

  சேரன்மகாதேவி தாலுகா மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

  அதில் கூறியிருப்ப தாவது:-

  மாதுடையாளர்குளத்தில் 240-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் ரேஷன் கடைகள் இல்லை. இதனால் நாங்கள் பொருட்கள் வாங்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையன்குளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

  தினமும் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க செல்வதால் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தோம். அப்போது சேரன்மகாதேவி தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்காலிக ரேஷன் கடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

  அதன் பேரில் தற்காலிகமாக கடை அமைக்க எங்கள் கிராமத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் இதுவரை எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவில்லை. உடனடியாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.
  • டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

  மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், "பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

  திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.

  இந்நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  மத்திய மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

  அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும். 12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது.

  பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

  கடந்த செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகரில் நியாயவிலை கடைகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்.

  நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பீரோ உடைக்காமல் நூதன திருட்டு
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பொன்னுரங்கன் மகன் விநாயகம் (வயது 34) இவருடைய மனைவி சங்கரி இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

  இந்த நிலையில் சங்கரி ரேசன் கடைக்கு சென்றார். பின்னர் அவருடைய கணவர் வீட்டை வெளி பக்கமாக தாழ்பால் போட்டுவிட்டு விநாயகம் வீட்டு பொருட்கள் வாங்க வெளியே சென்று உள்ளார்.

  இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் மாடியின் மீது ஏறி உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்க நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சங்கரி வீடு மற்றும் பீரோ திறந்த இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் கதவு மற்றும் பீரோ உடை க்கப்படாமல் திருடுபோய் உள்ளதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
  • கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், மற்றும் வடுகபாளையம் ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன்,ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print