செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் ஆய்வு செய்யாமல் திரும்பிய புதுவை கவர்னர்

Published On 2017-10-21 17:01 GMT   |   Update On 2017-10-21 17:01 GMT
எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் ஆய்வு செய்யாமல் கவர்னர் கிரண்பேடி பாதியிலேயே திரும்பியதால் கிருமாம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும் அமைச்சர் கந்தசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் கவர்னர் கிரண்பேடி மீது கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமியின் தொகுதியான ஏம்பலத்தில கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு நடத்த முடிவு செய்தார். ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும் நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கவர்னர் பார்வையிட திட்டமிட்டு இருந்தார்.

இதனை அறிந்த பிள்ளையார்குப்பம் பேட் மக்களும், பிள்ளையார் குப்பம் கிராம மக்களும் மற்றும் கிருமாம்பாக்கம் பேட், நரம்பை மீனவ பகுதி மக்களும் கவர்னரை கண்டித்து" கோஷம் எழுப்பும் வகையில் பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனை கவர்னர் கிரண்பேடி அறிந்ததும் அந்த பகுதிகளுக்கு செல்லும் முடிவை கைவிட்டு தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
Tags:    

Similar News