செய்திகள்

ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பா.ஜ.க செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2017-10-21 10:15 GMT   |   Update On 2017-10-21 10:15 GMT
ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பா.ஜ.க செயல்படுவதாக மெர்சல் திரைப்பட விவகாரத்தை குறிப்பிடாமல் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.



இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. பேச்சு, கருத்து சுதந்திரத்திற்கு தி.மு.க எப்போதும் துணை நிற்கும் ” என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News