செய்திகள்
கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகள்.

வத்தலக்குண்டு அருகே ஐம்பொன் சிலை கடத்தலில் கல்லூரி மாணவர்கள்

Published On 2017-09-23 11:24 GMT   |   Update On 2017-09-23 11:24 GMT
வத்தலக்குண்டு அருகே ஐம்பொன் சிலை கடத்தலில் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி கார்த்திகேயன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சந்தானமூர்த்தி ஆகியோர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் ஐம்பொன்சிலை வெளிமாநிலத்திற்கு கடத்தி கொண்டு சென்றதாக கூறினர்.

மேலும் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டியை சேர்ந்த ரஞ்சித்(28) என்பவர் சிலைகளை கொடுத்ததாக கூறினர். ரஞ்சித்தையும் கைது செய்த போலீசார் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் ரிஸ்வாபர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களிடம் சிலைகளை வாங்கி பாலகிருஷ்ணன், சந்தானமூர்த்தியிடம் கொடுத்ததாக ரஞ்சித் தெரிவித்தார். எனவே கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பலே இருக்கலாம் என்றும் கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News