செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை: மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ராமேசுவரத்தில் ஆய்வு

Published On 2017-07-24 07:50 GMT   |   Update On 2017-07-24 07:53 GMT
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பில் மத்திய அரசு சார்பில் ரூ. 15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

இதனை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரைக்கு வரும் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உச்சிப்புளிக்கு செல்கிறார்.

பின்னர் குண்டு துளைக்காத காரில் பேய்க்கரும்புக்கு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பிரதமரின் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் ராமேசுவரம் வந்தனர். பேய்க்கரும்புக்கு சென்ற அவர்கள் மணி மண்டபம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அங்கேயே நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நடராஜன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா, ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று பிரதமர் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். தொடர்ந்து உச்சிப்புளி ஹெலிகாப்டர் இறங்குதளம், விழா மேடை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News