செய்திகள்

கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-10 12:06 GMT   |   Update On 2017-07-10 12:09 GMT
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தி.மு.க. மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கோவில்பட்டி:

பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்தும், கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தி.மு.க. மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்சுணன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகர தலைவர் காஜா மீரான், ஆதிதமிழர் பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் அருந்ததி அரசு, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பக்கீரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பகுதி நேர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்று, வரி குறைப்பு மற்றும் வரி விலக்கை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News