செய்திகள்

கோத்தகிரி தாலுகா அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கல்லூரி மாணவர் சுருண்டு விழுந்து பலி

Published On 2017-06-25 15:07 GMT   |   Update On 2017-06-25 15:07 GMT
கோத்தகிரி தாலுகா அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த கல்லூரி மாணவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20-20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று அரவேனு கிரிக்கெட் கிளப் அணியும், தாந்தநாடு கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.

டாஸ் வென்ற அரவேனு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓபன் பேட்ஸ்மேனாக அரவேனுவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் விஷ்ணு களம் இறங்கினார். தாந்தநாடு கிரிக்கெட் கிளப்பு அணி வீசிய பந்துகளை நாலாபுறமும் அடித்து விளாசினார்.

80 ரன் அடித்தபோது விஷ்ணுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மைதானத்தை விட்டு வெளியேறிய விஷ்ணு சற்று ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் மீண்டும் களம் இறங்கினார். களம் இறங்கிய விஷ்ணு அதே வேகத்தோடு பந்துகளை அடித்து நொறுக்கினார். மளமளவென சதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 248- உயர்ந்தது. 108 ரன் எடுத்தபோது விஷ்ணு மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் அவரை மீட்டு கோத்தகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விஷ்ணுவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலியான விஷ்ணு எம்.சி.ஏ. படித்து வந்தார். மாணவர் இறந்தது குறித்து கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் நசீம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News