செய்திகள்

நீலகிரி கூக்கல்தொரையில் பேரிக்காய்களை ருசிக்க ஊருக்குள் புகுந்த கரடிகள்: தேயிலை தொழிலாளர்கள் அச்சம்

Published On 2017-06-24 15:52 GMT   |   Update On 2017-06-24 15:52 GMT
நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய், கொய்யா பழ சீசன் தொடங்கியுள்ளது. பேரிக்காய்களை சாப்பிட கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேரிக்காய், கொய்யா பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பேரிக்காய்களை சாப்பிட கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பழங்களை தின்று வருகிறது.

கூக்கல்தொரை கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஜோடி ஜோடியாக கரடிகள் ஊருக்குள் புகுந்து பேரிக்காய் மரங்களில் ஏறி பேரிக்காய்களை தின்று வருகின்றன. பேரிக்காய் ருசியால் அவைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.

இதனால் தேயிலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். தேயிலை பறிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முகாமிட்டுள்ள கரடிகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News