செய்திகள்

பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: எச்.ராஜா

Published On 2017-03-06 05:11 GMT   |   Update On 2017-03-06 05:11 GMT
பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் சேவை மையத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தொடங்கி வைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரி உயர்வு தமிழகத்தில் மட்டும் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே அதனை திரும்ப பெற வேண்டும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் போடி- மதுரை அகல ரெயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.

நதிகள் மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அதை பொதுப் பட்டியலுக்கோ அல்லது மத்திய பட்டியலுக்கோ கொண்டு வந்தால்தான் மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும்.

தமிழக அரசுக்கு அ.தி.மு.க. மத்தியிலும், மக்கள் மத்தியிலும் ஆதரவு இல்லை . எனவேதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மக்களை சந்திக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News