செய்திகள்
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய பும்ரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்தியர் பும்ரா

Published On 2019-09-01 02:39 GMT   |   Update On 2019-09-01 02:39 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கா நகரில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்தியா தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், கேப்டன் விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர் அரை சதமும், ஹனுமன் விகாரி சதமடித்தும் அசத்த 461 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து, இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பும்ரா பந்து வீச்சில் சிக்கி 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.



இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

இவருக்கு முன்னதாக, 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிங்கும், 2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக இர்பான் பதானும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.

இந்த போட்டியில் பும்ரா இதுவரை 6 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News