செய்திகள்
எம்எஸ் டோனி

டோனியை தாமதமாக இறக்கியது தவறு - கங்குலி, லட்சுமண் பாய்ச்சல்

Published On 2019-07-11 06:59 GMT   |   Update On 2019-07-11 06:59 GMT
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனியை தாமதமாக இறக்கியது குறித்து கங்குலி, லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளனர்.
லண்டன்:

உலககோப்பை போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் டோனியை 7-வது வீரராக களம் இறக்கியது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ளது.

அவரை ரி‌ஷப்பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முன்னதாக 4-வது வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. டோனியை முன்னதாக ஆடியிருந்தால் விக்கெட் சரிவை தடுத்து இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் டோனியை 7-வது வீரராக தாமதமாக களம் இறக்கியது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, லட்சுமண் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான வி.வி.எஸ்.லட்சுமண் இது தொடர்பாக கூறியதாவது:-



டோனியை மிகவும் பின் வரிசையில் (7-வது வீரர்) களம் இறக்கியது மிகவும் தவறான முடிவு ஆகும். தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்த பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக அவரை களம் இறக்கி இருக்க வேண்டும்.

டோனி, ரி‌ஷப்பந்த் இணைந்து இருந்தால் ஆட்டத்தின் தன்மை மாறி இருக்கும். இளம் வீரரான ரி‌ஷப்பந்த்துக்கு அவர் சரியான ஆலோசனை வழங்கி இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் கேப்டன் கங்குலி இதுதொடர்பாக கூறியதாவது:-

ரன்னை சேஸ் செய்யும் கட்டத்தில் டோனியை 7-வது வீரராக அனுப்பிய முடிவு தவறானது. அவரை முன்னதாக களம் இறக்கி இருக்க வேண்டும். அவர் முன்னதாக ஆடியிருந்தால் விக்கெட் சரிவை தடுத்து இருப்பார்.

பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்றோருக்கு கடைசிகட்ட ஓவர்கள் தான் சரியாக இருந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News