செய்திகள்

ஐபிஎல் 2019: டோனி சிறந்த தந்திரசாலி- டி வில்லியர்ஸ்

Published On 2019-03-27 08:16 GMT   |   Update On 2019-03-27 08:16 GMT
கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி சிறந்த தந்திரசாலி என பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #RCB #DeVilliers
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மென் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

கிரிக்கெட்டில் டோனி மிகச்சிறந்த தந்திரசாலி. சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு எதிரான எங்களது முதல் ஆட்டத்தில் டோனி பந்து வீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஆடுகளத்தில் பந்து நன்கு திரும்பியதால் சூழற்பந்து வீச்சாளர்களை வீச வைத்தார். அந்த அணி மிகுந்த அனுபவம் வாய்ந்ததாக உள்ளது. 9 வீரர்கள் 30 வயதுக்கு மேல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News