search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்"

    • சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் சென்னையில் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.
    • சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.

    "ஐபிஎல் 2024 சீசன்" டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு பக்கம் முடங்கியதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில், மறுபக்கம் விக்கெட்டுகள் உடனடியாக தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையில் Paytminsider இணைய தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்வதற்கான இடமே காண்பிக்கப்படவில்லை.

    24-ந்தேதி குஜராத்- மும்பை இந்தயின்ஸ், 27-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23-ந்தேதி பஞ்சாப்- டெல்லி போட்டிக்கான ஸ்லாட்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.

    அதேபோல் சிஎஸ்கே இணைய தளமும் முடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

    குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) காலை 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) காலை 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
    • வேறு எந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியடையவில்லை.

    ஐபிஎல் தொடரோட 15-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி பாப், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 212 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய லக்னோ அணியின் தொடக்கம் சுமாராகவே இருந்தது. பின்னர் அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஆகியோரால் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகமுறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது. வேறு எந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியை சந்தித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
    • ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.

    சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.

    இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.

    பெங்களூருவில் நடைபெற்ற ஐபில் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. #IPL2019 #CSK #RCBvCSK
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பார்திவ் படேல் பொறுப்புடன் விளையாடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

    சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை அணி களமிறங்கியது. வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் 5 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். இதனால் 17 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்தது.



    அடுத்து இறங்கிய அம்பதி ராயுடுவுடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ராயுடு 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னிலும் வெளியேறினர்.

    தனி ஒருவனாக போராடிய டோனி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. #IPL2019 #CSK #RCBvCSK
    ×