செய்திகள்

ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் துல்லிய பந்துவீச்சால் வங்காளதேசம் அணி 173 ரன்களில் சுருண்டது

Published On 2018-09-21 15:18 GMT   |   Update On 2018-09-21 15:18 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #AsiaCup2018 #BANvIND #INDvBAN
துபாய்:

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  வங்காளதேசத்தின் முன்னணி வீரர்களை இந்திய பவுலர்கள்
துல்லியமாக பந்து வீசி அவுட்டாக்கினர்.

இதனால் வங்காளதேசம் அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.



இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார்3 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #BANvIND #INDvBAN
Tags:    

Similar News