செய்திகள்

ரஷித் கான் அபார ஆட்டம் - வங்காளதேசம் வெற்றி பெற 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்

Published On 2018-09-20 15:29 GMT   |   Update On 2018-09-20 15:29 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
அபுதாபி:

அபிதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார்.



இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நயீபும், ரஷித் கானும் பொறுப்புடன் ஆடினர். இதனால்  ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில்  255 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 32 பந்துகளில் 57 ரன்களுடனும், குல்பதின் நயீப் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அந்த அணியில் ஹஷ்மலுல்லா ஷாகிதி 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வங்காளதேசம் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையடுத்து, 256 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடி வருகிறது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
Tags:    

Similar News