செய்திகள்

போராடி கிடைத்த வெற்றி மக்களுக்கு சமர்ப்பணம் - ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி

Published On 2018-05-28 10:24 GMT   |   Update On 2018-05-28 10:24 GMT
ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து தனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.



வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'

என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK

Tags:    

Similar News