இந்தியா

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Published On 2024-06-16 09:56 IST   |   Update On 2024-06-16 09:59:00 IST
  • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
  • திருப்பதியில் நேற்று 82,886 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

இதனால் கல்யாண வேதிகா வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். இன்று வார விடுமுறை இறுதி நாள் என்பதால் நேற்று மாலை முதல் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

நீண்ட நேரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததால் முதியவர்கள் குழந்தைகள் அவதிப்பட்டனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், டீ உள்ளிட்டவைகளை வழங்கினர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 82,886 பேர் தரிசனம் செய்தனர். 44, 234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

Tags:    

Similar News