இந்தியா

லக்னோ நகரில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

Published On 2025-12-25 07:12 IST   |   Update On 2025-12-25 07:12:00 IST
  • தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
  • பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நினைவிடம் வளாகத்தில் பா.ஜ.க. சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் தலைவர்களின் சிலைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். மேலும், இங்கு அமைக்கப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் அளித்தவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்,'' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News