என்னை கேள்வி கேட்க நீ யார்?... தேர்வுக்கு தாமதமாக வந்துவிட்டு ஆசிரியர் கன்னத்தில் பளார்... மாணவர் கைது!

தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்ற மாணவர், தனியாக வசிக்கும் ஆசிரியரை மிரட்டியுள்ளார்கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
என்னை கேள்வி கேட்க நீ யார்?... தேர்வுக்கு தாமதமாக வந்துவிட்டு ஆசிரியர் கன்னத்தில் பளார்... மாணவர் கைது!
Published on

குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷெஹ்ரா நகரில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜன.24ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 18 வயது மாணவர் முகமது கான் அன்சாரி இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என திமிராக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அப்போதே ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27 அன்று, தனது தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த அந்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மிரட்டலை தொடர்ந்து ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 3 ஆம் தேதி ஷெஹ்ரா காவல் நிலையத்தில் மாணவர், பள்ளி சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் சீற்றத்தை தூண்ட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com