உலகம்

EVM வாக்கு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் - புயலைக் கிளப்பிய எலான் மஸ்க்

Published On 2024-06-16 09:53 IST   |   Update On 2024-06-16 09:53:00 IST
  • இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.
  • தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும்.

அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரரான உலக பணக்காரர் எலான் மஸ்க், இ.வி.எம் வாக்கு இயந்திரத்தைக் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க் தொழிநுட்பங்கள் குறித்த தனது கருத்தை பொதுவெளியில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

முன்னதாக ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறிக்கும் என்று எச்சரித்த மஸ்க் தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதை ஒட்டி இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.

 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் அருகில் உள்ள புயர்ட்டோ ரிக்கோ தீவில் நடந்த தேர்தலில் இ.வி.எம் ஹேக் செய்யபட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்ததை அடுத்து இந்த கருத்தை மஸ்க் தெரிவித்துள்ளதாக பார்க்கமுடிகிறது.

 

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தலில் பயன்படுத்தப்படும் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

Tags:    

Similar News