உலகம்

டிரோன் தாக்குதல்: ரஷியா, உக்ரைனில் இருவர் பலி

Published On 2026-02-14 18:53 IST   |   Update On 2026-02-14 18:53:00 IST
  • ஜெனீவாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
  • உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கான புதிய அமைதி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருநாட்டு எல்லையில் உள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

ரஷியாவின் எல்லையில் அமைந்துள்ள பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஜானீவாவில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்களுடன் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபரின் தகவல் தொடர்பு ஆலோசகரும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News