உலகம்
பாகிஸ்தானில் சோகம்: பயணிகள் பேருந்து-லாரி மோதலில் 13 பேர் உயிரிழப்பு
- பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
- மோசமான சாலைகள், போக்குவரத்து விதிமீறலால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.