செய்திகள்

சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்

Published On 2018-04-25 23:29 GMT   |   Update On 2018-04-25 23:29 GMT
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore
பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடியின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் தோனி, அம்பதி ராயுடு ஜோடியின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடரில் தாமதமாக பந்து வீசுவது பெங்களூர் அணிக்கு இது முதல் முறை. எனவே அணி கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore
Tags:    

Similar News