செய்திகள்

காஷ்மீரில் பொதுமக்களுடன் கிரிக்கெட் விளையாடிய தோனி

Published On 2017-11-26 10:48 GMT   |   Update On 2017-11-26 10:48 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்துக்கு சென்ற கிரிக்கெட் வீரர் தோனியுடன் அப்பகுதி மக்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
ஸ்ரீநகர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஓய்வில் உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார். அவரை கவுரப்படுத்தும் வகையில் ராணுவ லெப்டினெண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பள்ளிக்கு மகேந்திர சிங் தோனி சில தினங்களுக்கு முன் சென்றார். அங்கிருந்த 
மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் கல்வியில் ஈடுபாடு காட்டுவது போல் விளையாட்டிலும் 
கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்துக்கு மகேந்திர சிங் தோனி இன்று சென்றார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். 



இதைத்தொடர்ந்து, கன்சார் பகுதியில்ராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், விளையாட்டை தாண்டி பல விஷயங்கள் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக அரசுதான் முடிவுசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News