செய்திகள்

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: டென்மார்க்கிடம் இந்தியா தோல்வி

Published On 2017-05-23 03:17 GMT   |   Update On 2017-05-23 03:17 GMT
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டென்மார்க்கிடம் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
கோல்டு கோஸ்ட் :

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலாவது குரூப்பில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று டென்மார்க்கை எதிர்கொண்டது. இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-18, 21-6 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே கிஜார்ஸ்பெல்ட்டை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 12-21, 7-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. முடிவில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோற்றது. இந்திய அணி அடுத்து இந்தோனேஷியாவுடன் இன்று மோதுகிறது.

Tags:    

Similar News