இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்த 2 பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள்

Published On 2024-04-20 09:45 GMT   |   Update On 2024-04-20 09:45 GMT
  • மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
  • காங்கிரசில் மூன்று, நான்கு அதிகார மையங்கள் செயல்படுகின்றன.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் தஜிந்தர் பால் சிங் பிட்டு உட்பட இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பிட்டு பா.ஜ.க.வில் இணைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தஜிந்தர் பால் சிங் பிட்டுவும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தோக் சிங் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரியும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

எம்.பி.யாக இருந்த சந்தோக் சிங் சவுத்ரி காலமானதை அடுத்து அவரது மனைவியான கரம்ஜித் கவுர் சவுத்ரி கடந்த ஆண்டு ஜலந்தரில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அவர் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்து வந்த தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறும் பிட்டு, "காங்கிரசில் மூன்று, நான்கு அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அவை அனைத்தும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முயற்சிக்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.


Tags:    

Similar News