இந்தியா

கொரோனாவின் புதிய அறிகுறி- புதிய வகை தொற்றும் கண்டுபிடிப்பு

Published On 2023-05-05 06:46 GMT   |   Update On 2023-05-05 06:46 GMT
  • இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.
  • ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.

கடந்த பிப்ரவரி வரை மிகவும் குறைந்திருந்த தொற்று பரவல், மார்ச் மாதத்தில் இருந்து சற்று அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டது.

ஆனாலும் பாதிப்பு தீவிரமாக இல்லை. இதனால் ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

இந்நிலையில் கேரளாவில் தொற்று பாதித்த பெரியவர்கள் சிலருக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் கான்ஜூன்க்டிவிடிஸ் எனப்படும் ஒரு வித கண் நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது தொற்று பாதித்தவர்களுக்கு கண் இளஞ்சிவப்பாக மாறுகிறதாம். இது கண்ணின் வெள்ளைப்பகுதியையும், கண் இமையின் உட்புறத்தையும் வரிசைப்படுத்தும் மெல்லிய அடுக்காகும்.

இதுகுறித்து கோழிக்கோட்டில் உள்ள கிரிட்டிக்கல் கேர் மெடிசினின் மூத்த ஆலோசகர் டாக்டர் அணுக்குமார் கூறுகையில், இதற்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் காணப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்படுவர்களில் 60 சதவீதம் பேருக்கு தொண்டை வலியும் இருந்தது.

இதுதவிர நோயாளிகளுக்கு காய்ச்சலும் இருந்தது. ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்துமே லேசானது முதல் மிதமானது தான். பாதிப்பு தீவிரமாக இல்லை என்றார்.

இதற்கிடையே கொரோனாவின் உட்பிரிவான எக்ஸ். பிபி.1.16 வகை தொற்று ஏற்கனவே பரவி வரும் நிலையில் தற்போது புதிய வகை தொற்றான எக்ஸ்.பிபி.2.3 என்ற புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,300 மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபு சங்கிலி தொடர் பரிசோதனையில் இந்த புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News