பா.ஜ.க. சாதனை வெற்றியை பெறும்- பிரதமர் மோடி நம்பிக்கை
- பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
- 4 விஷயங்களையும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து 370 இடத்தையும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 400 இடங்களையும் வெற்றி இலக்காக கொண்டுள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் 4 கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பா.ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
இந்தியா மிகப்பெரிய நாடு. அவர்கள் வேட்பாளர்கள் பெயர், அனுபவம் ஆகியவற்றை பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் வாக்காளர்கள் அவர்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இழக்கிறது.
நோக்கம் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். அது பகுதிகளாக இருக்க கூடாது. 2-வது அளவு கோல். அதுவும் பெரிதாக அமைய வேண்டும். வேகம் இந்த இரண்டும் ஒத்திசைவாக இருக்க வேண்டும.
எனவே நோக்கம், அளவு மற்றும் வேகம் பின்னர் திறமை இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்களும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.