இந்தியா

பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் தீ விபத்து:185 பேர் உயிர் தப்பினர்

Published On 2024-05-19 09:45 IST   |   Update On 2024-05-19 12:04:00 IST
  • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
  • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News