இந்தியா

சோனியா காந்தி

ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்கிறார் சோனியா காந்தி

Published On 2022-10-02 21:29 GMT   |   Update On 2022-10-02 21:29 GMT
  • பாரத் ஜோடோ பாதயாத்திரையில் வரும் 6-ம் தேதி சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
  • அவருடன் பிரியங்கா காந்தியும் இணைய உள்ளார். இதனால் அவர்கள் கர்நாடகம் செல்கிறார்கள்.

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ம் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது.

இந்நிலையில், இந்தப் பாதயாத்திரையில் ஒருநாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரைவில் கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வரும் 6-ம் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள ரெசார்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News