இந்தியா

பிரனீத் கவுர்

முன்னாள் முதல் மந்திரியின் மனைவி காங்கிரசில் இருந்து இடைநீக்கம்

Published On 2023-02-03 23:45 GMT   |   Update On 2023-02-03 23:45 GMT
  • பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
  • காங்கிரசில் இருந்து விலகிய இவர் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

புதுடெல்லி:

பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங். இவரது மனைவி பிரனீத் கவுர். முன்னாள் மத்திய மந்திரியான இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

இந்நிலையில், பிரனீத் கவுரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று அறிவித்தது.

கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பிரனீத் கவுருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் செயலாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '

பா.ஜ.க.வுக்கு உதவும் கட்சி விரோத நடவடிக்கைகளில் பிரனீத் கவுர் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறினர். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த புகாரை பரிசீத்ததன் முடிவில், பிரனீத் கவுரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்றும், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News