சிஏஏ மூலம் முதல் முறையாக 14 பேருக்கு இந்தியக் குடியுரிமை
- மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
- நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.
இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.