இந்தியா
கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் கொடி

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்- 26ந் தேதி நடைபெறுகிறது

Update: 2022-03-23 21:50 GMT
சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத்,  ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோர்  அண்மையில் சோனியாகாந்தியை சந்தித்து பேசினர். 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சோனியா காந்தி, கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையடுத்து  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் கட்சி தலைமையகத்தில் வரும் 26-ந் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அமைப்பு தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News