இந்தியா
ஆளில்லா விமானம்

தொலைதூரத்தில் இருக்கும் வீரர்களுக்கு தடுப்பூசிகளை ட்ரோனில் அனுப்ப இந்திய ராணுவம் ஏற்பாடு

Published On 2022-02-20 09:35 GMT   |   Update On 2022-02-20 09:35 GMT
மிஷன் சஞ்சீவினியின் ஒரு பகுதியாக தொலைதூர இடங்களுக்கு மருத்துவப் பொருட்களை வழங்க ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி வைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. மிஷன் சஞ்சீவினியின் ஒரு பகுதியாக தொலைதூர இடங்களுக்கு மருத்துவப் பொருட்களை வழங்க ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகின்றன.

அது தொடர்பாக வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. மிஷன் சஞ்சீவினி என்ற குறிப்புடன் தொடங்கும் அந்த வீடியோவில் விநியோக செயல்முறை குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. தொடர்ந்து, அதிகாரிகள் தளங்களில் உள்ள பனியை அகற்றி சுத்தம் செய்து தடுப்பூசிகள் அடங்கிய ஒரு தொகுப்பை ட்ரோனில் இணைக்கப்படுகிறது.

அது நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் காத்திருக்கும் ஒரு அதிகாரி முன்னிலையில் தொகுப்பை தரையில் இறக்குகிறது. தடுப்பூசிகள் விநியோகத்தின்போது தொகுப்பில் எந்த சேதமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்.. சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி
Tags:    

Similar News