இந்தியா

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்படுமா?- அடுத்த வாரம் முடிவு என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Published On 2024-05-10 10:35 GMT   |   Update On 2024-05-10 10:35 GMT
  • மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
  • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு அமலாக்கத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் திகார் ஜெயிலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

விசாரணை நடைபெற்று நீண்ட நாட்கள் கழித்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட 21 நாட்கள் மாறுபாட்டை உருவாக்கிவிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்க வழக்கின் தகவல் அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம்தான் கைது செய்யப்பட்டார் என நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

Tags:    

Similar News