இந்தியா
அபர்ணா யாதவ்

பா.ஜ.கவில் இணைந்த முலாயம் சிங் யாதவின் மருமகள்- உ.பி அரசியலில் பரபரப்பு

Published On 2022-01-19 05:21 GMT   |   Update On 2022-01-19 07:23 GMT
இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் லக்னோகாண்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ:

இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தலுக்கு முன்பே பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய மந்திரிகள், சில எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து விட்டனர்.  இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இந்நிலையில் உத்தர பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜனதாவில் இணைந்தார்.

இவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பர்திக் யாதவின் மனைவி ஆவார். 

முலாயம் சிங் யாதவின் மருமகளான அபர்னாயாதவ் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளது சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப் படுகிறது.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் லக்னோகாண்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News