இந்தியா
பிரியங்கா காந்தி

எனது மதம் குறித்து யோகி ஆதித்யநாத் சான்றிதழ் வழங்க தேவையில்லை -பிரியங்கா காட்டம்

Published On 2021-12-08 10:27 GMT   |   Update On 2021-12-08 11:53 GMT
நான் எந்த கோவிலுக்கு செல்கிறேன், எப்போதிலிருந்து கோவிலுக்கு செல்கிறேன் என்று யோகி ஆதித்யநாத்துக்கு தெரியுமா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று பெண்களுக்கான தேர்தல் அறிக்கையை (சக்தி விதான்) இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக சாடினார்.

நான் எந்த கோவிலுக்கு செல்கிறேன், எப்போதிலிருந்து கோவிலுக்கு செல்கிறேன் என்று யோகி ஆதித்யநாத்துக்கு தெரியுமா? நான் 14 வயதில் இருந்து பக்தியுடன் விரதம் கடைப்பிடிக்கிறேன் என்பது தெரியுமா? அவருக்கு என்ன தெரியும்? எனது மதம் அல்லது நம்பிக்கை குறித்து அவர் எனக்கு சான்றிதழ் வழங்குவதா? அவருடைய சான்றிதழ் எனக்குத் தேவையில்லை’ என பிரியங்கா காட்டமாக பேசினார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கோயில்களுக்கு வெளியே கரசேவை செய்வதைப் பார்க்கலாம் என்று கடந்த மாதம் யோகி ஆதித்யநாத் பேசியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News