செய்திகள்
கொரோனா வைரஸ்

4 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்துக்குள் சரிவு

Published On 2021-10-25 05:33 GMT   |   Update On 2021-10-25 07:24 GMT
நாடு முழுவதும் நேற்று 12,30,720 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 774 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,538, மராட்டியத்தில் 1,410, தமிழ்நாட்டில் 1,127 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மேலும் 443 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் நேற்று 71 பேர் மற்றும் விடுபட்ட பலி எண்ணிக்கை என மொத்தம் 363 மரணங்கள் அடங்கும்.

மொத்த பலி எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,40,016 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 18,762 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 67 ஆயிரத்து 367 ஆக உயர்ந்தது.

தற்போது 1,67,695 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 239 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 12,30,720 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.


இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நாடு முழுவதும் நேற்று 9,98,397 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 60 கோடியே 7 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்

Tags:    

Similar News