செய்திகள்
கோப்புபடம்

காசநோயை குணப்படுத்துவதற்காக குடும்பத்தினர் செய்த செயலால் வாலிபர் பலி

Published On 2021-07-10 11:36 GMT   |   Update On 2021-07-10 11:36 GMT
உப்பர் கைசாலி கிராமம் அருகே இரும்புத்தாது சுரங்கம் ஒன்று உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இந்த சுரங்கம் இருக்கிறது. இந்த சுரங்கத்தால் அந்த கிராம மக்களுக்கு காச நோய் மற்றும் மூச்சு குழாய் அலர்ஜி ஏற்படுகிறது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கியோண் ஜார் மாவட்டத்தில் உப்பார் கைசாரி என்ற கிராமம் உள்ளது. 

பழங்குடியினர் அதிகமாக இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் தேகுரி (வயது 34). 
கூலித்தொழிலாளியான இவர் காச நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நோயில் இருந்து அவரை குணப்படுத்த அவரது குடும்பத்தினர் சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்க முடிவு செய்தனர்.

அப்படி செய்தால் காசநோய் குணமாகி விடும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இதைத்தொடர்ந்து பிகாஸ் தேகுரி வயிற்றில் பழுக்க வைத்த இரும்பு கம்பியால் பலஇடங்களில் சூடு வைத்தனர். இதனால் வயிற்றுப்பகுதி காயம் அதிகம் நிறைந்து காணப்பட்டது. 
இந்தநிலையில் பிகாஸ் தேகுரி உயிரிழந்தார். அவரது வயிற்றில் சூடு வைக்கப்பட்டதால் அவர் இறந்ததாக தெரிகிறது. அவருக்கு திரவுபதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

உப்பர் கைசாலி கிராமம் அருகே இரும்புத்தாது சுரங்கம் ஒன்று உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இந்த சுரங்கம் இருக்கிறது. இந்த சுரங்கத்தால் அந்த கிராம மக்களுக்கு காச நோய்  மற்றும் மூச்சு குழாய் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் இந்த சுரங்கத்திற்கு கிராம மக்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 18 மாதத்தில் மட்டும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் காசநோய்க்கு பலியாகி இருப்பதாக சமூக ஆர்வலர் சன்ஜிப் சாகு தெரிவித்துள்ளார்.

அந்த தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரண்மஜி இதுதொடர்பாக கூறும்போது, “சுரங்கத்தால் கிராம மக்கள் காசநோய் மற்றும், மூச்சு குழாய் அலர்ஜியால் பாதிக்கப்படுவதாக சுகாதார மந்திரிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளேன். இதைத்தொடர்ந்து குழு ஒன்று ஆய்வு செய்தது.  கடந்த 18 மாதத்தில் சுரங்கம் அருகே உள்ள சில கிராமங்களை சேர்ந்த 15 பேர் இதே அறிகுறி நோய்களுடன் பலியாகி உள்ளனர்” என்றார்.

Tags:    

Similar News