செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது - ராகுல் காந்தி

Published On 2021-05-30 18:23 GMT   |   Update On 2021-05-30 18:23 GMT
பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி பதவியேற்றது முதல், அதாவது கடந்த 2014-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மன் கி பாத் என்ற பெயரில் வெளியாகும் இந்த நிகழ்ச்சி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிறது. நடப்பு மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணி ஆல் இந்தியா ரேடியாவில் ஒலிபரப்பானது.  பிரதமர் மோடியின் 77-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.

இதற்கிடையே, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு  கொரோனா தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி துவக்கம்  முதலே விமர்சித்து வருகிறார். அவ்வப்போது தனது டுவிட்டர் மூலம் தனது விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, இன்று பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையை மறைமுகமாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனாவுக்கு எதிராகப் போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற  வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது என பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News