செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

புதிய தொற்று 4.03 லட்சம், குணமடைந்தவர்கள் 3.86 லட்சம்... இந்தியாவில் கொரோனா நிலவரம்

Published On 2021-05-09 04:24 GMT   |   Update On 2021-05-09 04:24 GMT
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37.36 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்து பதிவாகிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,22,96,414 ஆக உயர்ந்துள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,42,362  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,86,444 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.09 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 82.15 சதவீதமாகவும் உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 37,36,648 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 16,94,39,663 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News