செய்திகள்
முதல் மந்திரி நவீன் பட்னாயக்

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு

Published On 2021-04-25 19:15 GMT   |   Update On 2021-04-25 19:15 GMT
ஒடிசாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
கட்டாக்:

ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.01 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.59 லட்சம் என்ற அளவில் உள்ளது. 1,981 பேர் பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளை குறைக்க நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்ற நிலை காணப்பட்டது.

இதனால், முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள், 2வது டோஸ் கிடைக்காமல் திணறி வந்தனர். இதனிடையே, உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு விலை அதிகரிக்கப்பட்டது.



இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் 18 முதல் 44 வயது வரையிலான ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவச அடிப்படையில் போடப்படும் என அறிவித்துள்ளார்.

வரும் மே 1-ம் தேதி முதல் நாட்டில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News