செய்திகள்
முதல்வர் பூபேஷ்பாகேல்

சத்தீஷ்கர் மருத்துவமனை தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

Published On 2021-04-18 06:12 GMT   |   Update On 2021-04-18 06:12 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராய்ப்பூர்:

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் பலர் சிக்கி கொண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 29 நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் தீக்காயம் அடைந்து பலியானார். மற்றவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.

ஆஸ்பத்திரியில் எரிந்த தீயை கடும் போராட்டத்திக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.


இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அஜய்யாதவ் கூறும்போது, தீ பிடித்த போது தீயணைக்கும் கருவிகளை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து விசாரணை நடத்துவோம்.

சம்பந்தபட்டவர்கள் மீது அலட்சியமாக இருந்தாக வழக்குபதிவு செய்யப்படும் என்றார். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை முதல்வர் பூபேஷ்பாகேல் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News