செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் -மம்தா பானர்ஜி உறுதி

Published On 2021-04-02 08:36 GMT   |   Update On 2021-04-02 08:36 GMT
பாஜகவுக்கு இந்த மாநிலத்தில் எந்தவொரு தலைவரும் இல்லை, அவர்கள் எங்களிடமிருந்து தலைவர்களை கடன் வாங்கியுள்ளனர் என மம்தா பானர்ஜி பிரசாரத்தின்போது பேசினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கூச் பெகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். நந்திகிராம் தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். கவலைப்பட தேவையில்லை. அதேபோல் நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் 200 வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் ஆட்சியமைக்க முடியும்.

அமித் ஷா தேர்தல் ஆணையத்தை வழிநடத்துகிறார். மத்திய படைகள் இரவு நேரத்தில் கிராம மக்களை மிரட்டுகின்றன. அவர்கள் பாஜகவுக்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் உங்களை மிரட்டினால் பயப்பட வேண்டாம், அவர்களை எதிர்கொள்ளுங்கள்.

பாஜகவுக்கு இந்த மாநிலத்தில் எந்தவொரு தலைவரும் இல்லை. அவர்கள் எங்களிடமிருந்து தலைவர்களை கடன் வாங்கியுள்ளனர். பாஜக எங்கள் தொண்டர்களை கொலை செய்கிறது. தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் நான் அமைதியாக இருக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவேன். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News