செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Published On 2021-01-19 09:04 GMT   |   Update On 2021-01-19 09:04 GMT
பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
புதுடெல்லி:

நல்ல சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். உயர் மட்ட பாலங்கள் அதிகமாக கட்டியுள்ளோம். இப்படி பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்துகொண்டு இருக்கிறது.

கேள்வி:- உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?

பதில்:- 2 புயல்களால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டேன். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

கேள்வி:- மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 10 நாட்களே இருக்கிறது. தமிழகத்துக்கு கூடுதல் நிதி கேட்டீர்களா?

பதில்:- தமிழகத்தில் உள்ள முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.62 ஆயிரம் கோடியில் நிறைவேற்றித் தர கேட்டுள்ளோம்.

இதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவை பாதிப்பாதி நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.

கேள்வி:- பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசினீர்களா?

பதில்:- அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று திரும்ப திரும்ப சொல்கிறேன். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். நான் இங்கு வந்தது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக... தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்தேன். இருவரிடமும் அரசியல் பேச நேரமும் இல்லை. அதற்கு இன்னும் காலம் நிறைய இருக்கிறது.

கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு தேவையானதை மட்டுமே சொல்வார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அம்மாவின் அரசை 3-வது முறையாக மீண்டும் தமிழகத்தில அமைப்போம்.

கேள்வி:- தமிழகத்தில் தாமரை மலரும் என்று பா.ஜனதா கட்சியினர் கூறுகிறார்களே?

பதில்:- ஒவ்வொரு கட்சியினரும் அந்த கட்சி வளர வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பார்கள். அடுத்த கட்சி வளர வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். தேர்தல் வரும் வரை கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்கப்படுத்துவது அந்த கட்சி தலைவர்களின் நோக்கம். அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. சாதாரண கட்சியாக இருந்தால் கூட அப்படி தான் பேசுவார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படிதான் அவர்கள் பேசுவார்கள்.

Tags:    

Similar News